வெள்ளி, 26 ஜூன், 2009

நன்றி

நீலப்பந்தல்,
நிறையும் ஒளிப்பூக்கள்,
நிலா...

பனியில் கரைந்து பரவும்
சில்வண்டோசை..
ஓடைச்சலசலப்பில்
உலவும் மௌனம்

வரப்பில் உறங்கி
விழித்தவன் மலைக்கிறேன்

உறங்க இடம் கேட்கையில்
இரங்க்காதவர்க்கெல்லாம்
எப்படி நன்றி சொல்வேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக