வெள்ளி, 22 மே, 2009

தெரிதல்


என் குருதி முழுவதும்
நம்பிக்கையின்மை நிறைந்துள்ளது.

என் தெருக்களில்
சந்தேகங்களின் விளக்குகள் எரிகின்றன.

கூழாங்கற்களின் தேசத்தில்
எல்லவற்றையும்
எடுத்து வீசும்வரை
தென்படுவதில்லையே வைரங்கள்.

வீசும் கற்களின் சலனமும் சப்தமும்
என்னைச் சூழ்ந்துள்ளது.

இருந்தாலும்
எடுத்து வீசிக்கொன்டிருக்கிறேன்
ஒவ்வொரு கூழாங்கல்லாய்.



மோனித்திரு என் அருகில்
நிலவின் அழகுபற்றி,

மலரின் மென்மைபற்றி,

தேனின் சுவைபற்றி,
சேற்றுவயல் வாசம்பற்றி
பேசுவதானால் கூடவராதே.

மெய் வாய் கண் மூக்கு செவி

எனக்குண்டு.

மோனித்திரு என்னருகில்.

மெய் வாய் கண் மூக்கு செவி
இவைகளல்லாத ஒன்றால்
உணரவேண்டும் நான் உன் இருப்பை.

வியாழன், 14 மே, 2009



சொல்ல என்னதான் இருக்கிறது
கண்ணுள்ளவர்க்கு...

புதன், 6 மே, 2009












பசி பக்தி
பால்
பஞ்சாமிர்தம்
தேன்
தயிர் ...
அரோஹரா! அரோஹரா!

ஆயிற்று அபிஷேகம்..
பசியில் அயர்ந்து உறங்கும்
பட்டினிப் பக்தன்
கனவில் நக்கிப் பசியாறுகிறான்
தெய்வ விக்கிரகங்களை .