திங்கள், 30 மார்ச், 2009


ஆமையின் மரணம்..

ஓடு பிளந்து கிடக்கிறது
கரியசெங்குருதி பிசுபிசுக்கிறது
தலை பிதுங்கித் தெரிகிறது
கால்கள் திசையற்று பிரிந்து கிடக்கின்றன..

ஒரு ஆமை இறந்து கிடக்கிறது.

அது யாரைத் தீயிட்டது?
யாரை வஞ்சித்தது ?
யாரைபப் பழிதீர்த்தது?
யார் முதுகில் கடித்தது?

உங்கள் காலடி ஓசைகளுக்கே அது அஞ்சியதே!
உங்கள் நிழல்களே தன்னை சுடும் என்று
ஐம்புலன்களும் ஓட்டுக்குள் ஒடுக்கியதே!
பசிய புற்களை பசிதீர்க்க மென்றபோதுகூட
அது சத்தமிட்டதில்லை.

தெருக்களின் சந்துகளில்
நீங்கள் களவாடியபோது,
வன்புணர்வு கொண்டபோது,
பழிதீர்த்துகொண்டபோது,
அது தெருவைக்கூடக் கடந்ததில்லை.

பின் எதனால் அதைக் கொன்றீர்கள்?





1 கருத்து: