வெள்ளி, 22 மே, 2009

தெரிதல்


என் குருதி முழுவதும்
நம்பிக்கையின்மை நிறைந்துள்ளது.

என் தெருக்களில்
சந்தேகங்களின் விளக்குகள் எரிகின்றன.

கூழாங்கற்களின் தேசத்தில்
எல்லவற்றையும்
எடுத்து வீசும்வரை
தென்படுவதில்லையே வைரங்கள்.

வீசும் கற்களின் சலனமும் சப்தமும்
என்னைச் சூழ்ந்துள்ளது.

இருந்தாலும்
எடுத்து வீசிக்கொன்டிருக்கிறேன்
ஒவ்வொரு கூழாங்கல்லாய்.

1 கருத்து:

  1. புரிதல்களுக்கு அப்பாற்பட்டது,
    நிறைய விடயங்கள்....

    simply superb poem.
    add followers gadjet to ur blog and publish it in thamizmanam.com.

    பதிலளிநீக்கு